Featured Articles
All Stories

Thursday, 30 September 2010

இனிமையான வாழ்வுக்கான CANDO தத்துவம்....!!!

                             இது அமெரிக்காவில் கார் புரட்சிக்க வித்திட்ட ஹென்றி போர்ட் ஆல் உருவாக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டதாகும். யார் இந்த ஹென்றி போட் என்றால் 30 ஜீலை 1863 ல் வில்லியம் பொட் மற்றும் மேரி போட் ஆகியோருக்கு பிறந்தவர். அமெரிக்காவில் பெரிய மாற்ற்தை எற்படுத்திய இவர் 7 ஏப்ரல் 1947 ல் தனது83 வது வயதில் இறந்தார். அதாவது CANDO என்றால் ஆங்கிலத்தில் செய்ய முடியும் என்று பொருள்படும். இவர் கடைப்பிடித்த 5 நடைமுறைகளின் ஆரம்ப எழுத்தக்களால் உருவாக்கப்பட்டதே இதுவாகும்.

C – Cleanup
A - Arranging
N – Neatness
D – Discipline
O – Ongoing improvement.

20 comments:

Saturday, 25 September 2010

என் வன்னி முகாம்....!!!

காலை மணியோசை
தூபமிடும் வானம்
டம்ளர் நீருடன்
காலைச் சிற்றுண்டியாய்
இரவின் உண்ணாவிரதம்
கலைக்கப்படும்

சப்பாணி கட்டி உண்போரின்
உணவுண்ணல் சிரமத்துக்காய்
நாள்தோறும் விசேட உணவு
வாய் என்ற குறிகாட்டிக்கு
எட்ட வைத்தே
இலக்கு வைத்தடிக்க
கடலை என்ற பெயரில்
விடலைகளை மந்த மாக்கும்
காலையுணவு

22 comments:

Thursday, 23 September 2010

அசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...!!!

                      ஓவ்வொரு தமிழனும் கட்டாயம் பார்க்க வேண்டிய செய்தியாகும். முக்கியமாக பதிவர்கள், வாசகர்கள் மற்றும் இணைய உரிமையாளர்கள் ஒத்துழைப்பு நல்குங்கள்.
பாதிக்கப்பட்டவர்
                   இது அசினின் பிள்ளையார் பிடிக்க குரங்கு வந்த கதையாகும். இதில் உள் குற்றம் வெளிக் குற்றம் பார்க்கக் கூடாது தான் அனால் பாதிக்கப்பட்டது ஏழைகளல்லவா. திரையில் ஏழைகளுக்கு உதவத் துடிக்கும் நடிகர்களோ அல்லது அவர்கள் ரசிகர்களோ இதை கவனத்திலெடுங்கள்.
சம்பவம் என்னவென்றால் சில நாட்களிற்கு முன் யாழ் வந்திருந்த அசின் இங்குள்ள 300 வறியவர்களுக்கு விழிவெண்படல அறுவைச்சிகிச்சை இலவசமாக செய்து கொடுத்தார்.

96 comments:

Wednesday, 22 September 2010

ஒரே சொல் எதிர்மாறான அர்த்தம்...!!!!


                                 கால் வாருதல் என்ற சொல்லின் தமிழ் அர்த்தத்தை பார்த்தால் துரோகம் தான். ஏனெனில் ஒருவரின் காலை வாரி விட்டு அவரை வீழ்த்துவது எம்மவரில் பலருக்கு கைவந்த கலை. இது ஆண்டாண்டு காலமாக தமிழனின் வரலாற்றுப் பதையில் பரீட்சையமான சொல் ஒன்று ஆனால் அவர்களுக்கு நரகத்திலும் இடம் கிடைக்காது.

                                   மேற்கத்தைய இடங்களில் இச்செயல் செய்பவருக்கு நிச்சயம் சொர்க்கம் கிடைக்கும் என்று சொல்வார்கள். அப்படி அங்கு என்னதான் வித்தியாசப்படுகிறது என்று பார்த்தால். இரு இடங்களிலும் நடைபெறும் செயற்பாடுகள் தான் காரணம். இங்கு நடப்பவை பற்றி நான் கூறித்தான் நீங்கள் அறிய வேண்டும் என்பதில்லை.

33 comments:

Sunday, 19 September 2010

பேன் பார்க்கப் போகும் எந்திரன்.....!!!

                          இது ஒரு புரட்சியை ஏற்படுத்தப் போகும் தொழில் நுட்பப் வளர்ச்சியாகும். ஆனால் இதற்கான செலவுகளுடன் ஒப்பிடுகையில் மருத்துவத்திற்கு பாவிப்பதற்கான ஆய்வுகள் தான் நடைபெற்றுவருகிறது.
அதற்கு அதிவேக இணையத் தொழில் நுட்பம் தேவை. அதற்காக நம்மூர் தொலைத் தொடர்பாளர் விளம்பரங்களை நம்ப வேண்டாம். 1Mbps வேகம் என்று சொல்வார்கள் ஆனால் 50Kbps வருவதே பெரும் பாடு.

11 comments:

Friday, 17 September 2010

போட்டிப் போக்கு மாற்றி அணியும் கண்டு கொள்ள ஐசிசி யும்....!!!!


                    இலங்கை அணியின் இந்தச் சம்பவம் பலர் அறிந்திருந்தாலும் சிலருக்கே இதன் காரணம் தெரிந்திருக்கிறது.. அது தாங்க கடந்த வருடம் நொந்து நூலாகிய நிலையில் இலங்கை வந்த கிரிக்கேட்டிற்கே கிடைத்த சாபமாகக் கருதப்படும் பாகிஸ்தான் அணி பற்றிய விடயம் பற்றித்தான் கூறுகிறேன்.


                   இலங்கை வந்த பாகிஸ்தானுக்கு ஆரம்பம் முதலே பலத்த அடி டெஸ்ட் போட்டியில் 2-0 தோல்வி. ஒரு நாள் போட்டியில் முதல் மூன்று போட்டியும் அடி என சோர்ந்து போனது. அப்போது தான் அந்தச் சம்பவம் நடந்தது. அதாவது ஜனாதிபதியின் பாகிஸ்தான் விஜயம். இரண்டுக்குமே சம்பந்தம் இல்லைப் போல் தான் இருந்தது. ஆனால் அடுத்த போட்டிகள் தலைகீழாக மாறியது. அடுத்து வந்த இரண்டு ஒரு நாள் போட்டியிலும் பாகிஸ்தான் தான் வெற்றி. இலங்கை படு தோல்வியடைங்த்து. சரி போனால் போகட்டும் என்று பார்த்தால் 20-20 அதே பாட்டு தான் அப்படியானால் என்ன நடந்திருக்கும். ஐசிசி ற்கும் தெரியும், எனக்கும் தெரியும், இப்ப உங்களுக்கும் தெரியும்.

17 comments:

Thursday, 16 September 2010

பிரபு தேவாவின் வலையில் விழுந்த பெண்களின் பட்டியல்.....!!!!

                         இரண்டு சினிமா முக்கியஸ்தர்களின் பெயரைத் தன் பெயரில் கொண்டு தனக்கென்றோர் நிரந்தரப் பட்டப்பெயர் வாங்கிக் கொண்டவர் தான் நமது நடனப்புயல் பிரபுதேவா.. 10ம் ஆண்டுவரை தான் படித்திருந்தாலும் இவர் திறமை மிகவும் உயர்ந்தது. இந்திய சினிமாவிலேயே நடனப் புரட்சியை ஏட்படுத்தியவர் என்றால் அது பிரபு தேவாதான் (இதை நான் சொல்ல வில்லை டிஸ்கவரி காணொளி ஒன்று சொல்கிறது).

                       ஆனால் இவர் சில பெண்களின் வாழ்வில் நடனமாடியது தான் பொறுக்க முடியாத குற்றமாகும். இங்கு நான் குறிப்பிடப் போவது ஒரு சிலரைப்பற்றித்தான் காரணம் எனக்கு தெரிந்ததை தான் என்னால் சொல்ல முடியும்... (உங்களுக்கு ஏதாவத தெரிந்தால் கருத்தப் பெட்டியில் இடுங்கள்)..

48 comments:

Wednesday, 15 September 2010

வாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....!!!

                         என்ன இவன் புதுப் புது கதைவிடுகிறான் என்று யாரும் நினைக்க வேண்டாம். இவை நானும் என்னைச் சுழ இருந்தவர்களும் மேற்கொண்டவை தான்..
                      இனி மழை காலம் வந்துவிட்டது இப்பிரச்சனை எல்லோருக்கம் சிரமத்தைக் கொடுக்கும் ஒரு விடயமாக மாறிவிட்டது. அதற்கான ஒரு சின்னத் தீர்வைத் தான் இந்தச் சின்ன ஆக்கத்தில் பதிவிடுகிறேன். வழமையாக நண்பர்கள் கேட்கும் ஒரு வேண்டுகை ஏன் சின்னச் சின்ன ஆக்கங்களாய் எழுதுகிறாய் என்று. என்ன செய்வது பானையில் உள்ளது தானே அகப்பையில் வரும்.

30 comments:

Monday, 13 September 2010

தமிழ் நாடு ஈழத்திற்கு இதையாவது தருமா..?

                       ஈழத்தமிழர் மீண்டும் ஒரு முறை தமிழக அரசிடம் வேண்டி நிற்க வேண்டிய தருணம் வந்திருக்கிறது. இதையாவது முதல்வர் கண்டு கொள்வாரா.. அல்லது பசப்பு வார்த்தை பேசி நழுவிக் கொள்வாரா தெரியவில்லை.
                         சம்பவம் இது தான் 2008 ம் ஆண்டளவில் நாமக்கல் மாவட்டத்தில் பொலிஸாரால் ஒரு சிலை கைப்பற்றப்பட்டது. இது முருகக் கடவுளின் பஞ்சலோகச் சிலையாகும்.

16 comments:

Sunday, 12 September 2010

சுவர்ணலதாவின் வாரலாற்றுத் தடம்....

                               ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ஒரு பாடகிக்காக எழுதப்படும் ஒரு வரலாற்றுத் தொகுப்பு இதுவாகும்.
                               1973 ம் வருடம் இந்தியாவின் கேரளாவில் உள்ள பாலக்காடு எனும் இடத்தில் இவர் செருக்குட்டி மற்றும் கல்யாணி அகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவரது தந்தையார் ஒரு சிறந்த ஆர்மோனிய வாசிப்பாளர் ஆவார். 1987 காலப்பகுதியில் சென்னைக்க குடிபெயர்ந்த இவர் எம்எஸ் விஸ்வநாதனால் அடையாளம் காணப்பட்டு இளையராஜாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். இவர் பாடிய முதல் தமிழ் பாடல் 1987 ம் ஆண்டு நீதிக்குத் தண்டனை என்ற படத்தில் பாடிய பாரதியார் பாடலாகும் (சின்னம் சிறு கிளியே). ஆனால் சிலர் இது 1982 ல் வந்ததாகச் சொல்லிக் கொள்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பல்லாயிரகண்கணக்கான திரைப்படப் பாடல்களை பாடி புகழ் பெற்றவர். பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த கருத்தம்மா படத்தில் இவர் பாடிய பாடலுக்காக (போறாளே பொன்னுத்தாயி) சிறந்த பின்னணி பாடகி என்ற தேசிய விருது வழங்கப்பட்டது.

28 comments:

யாழ்தேவி இணையமும் நாசமாய்ப்போகும் மாணவர்களும்...

             வாருங்கள் வாசகப் பெருமக்களே தலைப்பைப் பார்த்தவுடன் தலை சுற்றுகிறதா..? என்ன செய்வது எனது கட்டுரையின் கனத்தை குறைக்க கூடாது என்பதற்காகவே இருவிசயத்தையும் தொடர்புபடுத்தி எழுதுகிறேன்.. உள்ளே இருப்பது முக்கியமான சமூகப்பிரச்சனையாகும்.

                          முதலில் என்னை நட்சத்திரப் பதிவராக்கிய யாழ்தேவிக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன் (தலைப்பை தப்பாகப் புரிந்தால் நான் பொறுப்பில்லை). 
              

26 comments:

Friday, 10 September 2010

அன்புள்ள சந்தியா அங்கம் - 2

                                       கதைக்குள் நுழைவதற்கு முன் ஒரு அறிவுறுத்தல் இது மென்மையான காதல் கதை விரும்பிகளுக்கப் பொருத்தமற்ற கதையாகும். அத்துடன் காதாபாத்திரங்களின் பெயரையும் அப்படியே தொடர்கிறேன்....
                                  நான் எப்போதோ எழுதிய கதை சுபாங்கனால் ஆரம்பிக்கப்பட்ட மென்மையான கதைக்களத்துக்குள் இதை நான் அப்போது புகுத்த விரும்பவில்லை அதனால் தான் வெளியே வந்து இரண்டாம் அங்கமாக ஒரு சமூக பிரச்சனையை புகுத்தி வெளியிடுகிறேன்.
                       இக்கதை ஜனா அண்ணாவிடம் இருந்து தொடர்கிறது. இதன் அங்கம் ஒன்றில் அருமையான மென்மை காதல் ஒன்றை பதிவுலகுக்கு தந்தவர்கள் சுபாங்கன் >>லோசன் >>ஜனா >>பவன் >>அனுதினன் (இவர்களின் பெயர்களைச் சொடுக்கி அவர்களின் கதையை படிக்கவும்)

முன் கதைச்சுருக்கம்
சுபாங்கன்
பேருந்தில் பயணித்த சுதா அருகில் காரில் வந்த சந்தியாவை காண்கிறான். மண்சரிவால் அவள் பயணம் தடைப்பட தன் வீட்டுக்க அழைத்துப்போய் அறிமுகப்படுத்தி தொலைபேசி இலக்க பரிமாறலுடன் பிரிந்த கொள்கிறார்கள்.
லோசன்
சந்தியாவிடம் இருந்த வரும் அழைப்பொன்றில் திருமண அழைப்பு மடல் அனுப்ப அவன் முகவரி கேட்கிறாள் அவன் உடைந்த போகிறான்.
ஜனா
தனக்கு வந்த உறையை பார்த்தவன் திகைத்தப் போனான் அதில் இவன் சகோதரி பிரியாவிற்கும் சந்தியாவின் அண்ணனுக்கும் திருமணம் என்றிருந்தது. அதைப்பார்த்தவன் மயங்கி விழுகிறான்...
இனி அடியேன்

19 comments:

Tuesday, 7 September 2010

பொட்டு வைக்கச் சொல்வதன் விஞ்ஞான காரணம்

               இது ஒரு பழமை வாதமல்ல. பழையவர் காரணத்துடன் தான் சொல்கிறார்கள் என்பதற்கான விளக்கமாகும்.

              பழையவர்கள் பொட்டு வைக்க சொன்ன காரணம் சரியான முறையில் கடத்தப்படவில்லை. இடையில் வந்தவர்கள் குங்குமத்தை ஒரு திருமண அடையாளப் பொருளாகத்தான் பயன்படுத்தினார்கள். ஆனால் பொட்டு என்பது ஒரு முக்கியமான பொருளாகும். அதிலும் குங்குமம் என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. நீங்கள் வசியம் பற்றி அறிந்திருப்பீர்கள். இதை மேற்கத்தியவர்கள் HYPNOTISM என்று அழைக்கிறார்கள். மனதை ஒரு முகப்படுத்தக் கூடிய ஒருவரால் இது சாத்தியப்படும்என்பது எல்லோருக்கும்தெரியும்.

22 comments:

Sunday, 5 September 2010

கிருஷ்ணரும் கிறிஷ்துவும் ஒன்று தானே (ஒரு ஒப்பீடு)...

                                     சில காலம் ஒய்ந்திருந்த மதப்போர் மீண்டும் இணைய வழியில் புது உருப்பெற்று தலை எடுக்க அரம்பித்துள்ளது. ஆனால் ஒன்று மட்டும் உண்மை தானே
"ஒன்றே குலம் ஒருவனே தேவன்"

                                     இவை எப்போதோ நான் கேட்ட ஒரு சில தகவல்களை வைத்து மிகுதியை தொடர்ந்திருக்கிறேன். இன்றைய ஞாயிற்றுக் கிழமை நாளில் இதை வெளியிடுவது சிறப்பாக இருக்குமென்பதால் எனது இவ்வார ஆன்மீகப் பதிவாக இடுகிறேன்.

29 comments:

Saturday, 4 September 2010

வன்னி மக்களின் நகை திருடியவரைத் தெரியுமா...?

                                 இது இதுவரை உண்மை புலப்படாத ஒரு உவமைக் கட்டுரையாகும். இதில் மக்களுக்கு பெரியளவு பாதிப்புகள் இன்னும் வரவில்லையானாலும் ஒரு தொகை நட்டம் இருப்பது நிச்சயம் உண்மை தான்.
                                    இங்கிருக்கும் புகைப்படத்தைப் பார்த்தால் உண்மை தெரியும். இது நகை அடகு வைத்தமைக்கான பற்றுச்சீட்டாகும். அதுவும் ஒரு வார கால இடைவெளியில் வைக்கப்பட்டதாகும். ஒரு பற்றுச்சீட்டில் தவறியதாக ஆங்கிலத்தில் குறிக்கப்பட்டுள்ளது. மற்றையதில் இவர்கள் செலுத்த வேண்டிய வட்டிப் பணம் குறிக்கப்பட்டிருக்கிறது.

16 comments:

Friday, 3 September 2010

மனிதன் உயிரோடிருக்கிறானா..?


இது போர் வேண்டுமென்று யாருடமோ பணம் வாங்கி அறிக்கை விட்டிருக்கும் தமிழகத்தின் பிரபல கவிஞருக்கும், இம்புட்டு நாள் போர் நடக்கையில் கம்மண்ணு இருந்திட்டு இப்ப மட்டும் வீர வசனம் பேசும் அமெரிக்க குடியுரிமையாளிக்கும், தன் அகதிக் குடியுரிமை பறி போய்விடும் என்று அந்நிய நாட்டில் இருந்து சொந்த நாட்டு உறவுகளுக்கு குழிபறிக்கும் கோடாரிக்காம்புகளுக்கும் சமர்ப்பணம்...

11 comments:

Thursday, 2 September 2010

செத்தும் கொடுத்த சீதாக்காதி கதையின் விஞ்ஞான விளக்கம்.

ஆரம்பத்திலேயே சொல்லிக் கொள்கிறேன். இது இலக்கியத்தை கொச்சைப்படுத்த எழுதப்படவில்லை. எல்லோரும் இலக்கிய கண்ணாடி போட்டுப் பார்த்த ஒரு விடயத்தை என் குருநாதர் சுஜாதா வழியில் நான் விஞ்ஞானக் கண்ணாடி போட்டுப் பார்த்திருக்கிறேன்.

                            அந்தப் புலவனால் இனியும் வறுமையை பொறுக்க முடியவில்லை. அவன் முடிவாக ஒரு தீர்மானத்திற்கு வந்து விட்டான். சீதாக்காதி மன்னனின் வள்ளல் குணம் பற்றி பிற்பகல் தான் யாரோ சொல்லக் கேட்டிருந்தான். தீர்க்கமான முடிவுக்கு வந்த புலவன் ஒரு அமைதியான இடம் நோக்கிச் சென்றான். அவருக்கு நல்ல ஒரு பாடல் பாட வேண்டும் அவர் மனம் மகிழ்ந்து பொன்னும் பொருளும் அள்ளி அள்ளித் தர வேண்டும். என மனதில் பெரிய மனக் கோட்டை காட்டிக் கொண்டு பாடல் புனைய ஆரம்பித்தான்.
நேரம் நடு நிசியை அண்மிக்கையில் தான் அவன் ஒரு அழகான பாடலுடன் மீண்டான். அதிகாலையே போக வேண்டியிருந்ததால் உடனேயே போய்ப் படுத்தான்.

29 comments:

Total Pageviews

Followers

என் குறும்படங்கள்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்

back to top