வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

ஒக்டோபஸ் சாத்திரம் உண்மைதானா? ஆய்வாளர் பார்வையில்...

பிற்பகல் 8:08 - By ம.தி.சுதா 16

                                 இது மழை விட்டும் ஓயாத தூறல் பற்றிய கதையாகும். என்ன பலர் பார்த்திருப்பீங்க, கேட்டிருப்பீங்க கேளாதவர்கள் கீழே போங்க...
                               இந்த சாத்திரம் பற்றி பலர் பல கருத்தை தெரிவித்தாலும் இந்தக் கருத்து கொஞ்சம் நம்பக் கூடியதாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் இங்குள்ள படங்களைப்பார்த்தால் தெரியும். இவர்கள் ஒரு பெட்டியில் போட்டி நடைபெறப்போகும் இரு நாட்டினுடைய கொடிகளை வைத்து இதன் தொட்டியில் வைப்பார்கள். ஒக்டோபஸ் எந்த பெட்டியை தொடுகிறதோ அந்த அணி வெல்லும் என்பது நம்பிக்கை. இது பல தடவை சரியாக வந்ததால் அதன் மவுசு கூடிவிட்டது.
                       
ஆனால் ஒரு முக்கிய ரகசியத்தை இப்பொழுது தான் கண்டு பிடித்திருக்கிறார்கள் அதாவது ஒக்டோபஸிற்கு கடும் மஞ்சள் நிறமென்றால் அதிக விருப்பமாம் படத்தை மீண்டும் வடிவாகப்பாருங்கள் உண்மை புரியும்.
இது இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட உண்மை நாளை வேறு உண்மைகளும் புலனாகலாம். சிலவேளை அடுத்த உலககிண்ணத்திற்கு எல்லா அணிகளும் மஞ்சள் சீருடையையே அதிகம் விரும்பலாம். ஒக்டோபஸ் உயிரோடிருந்தால்..........எனது கருத்துப்படி ஒக்டோபசுக்கு மஞ்சள் பிடிக்கிறதோ இல்லையோ இந்த நிறத்திற்கும் வெற்றிப்பட்டங்களிற்கும் ஒரு தொடர்பிருக்கிறது. கிரிக்கேட்டிலும் பாருங்கள் எப்படி அடிமட்டத்தில் இருந்தாலும் கடைசியில் முன்னுக்கு வருவது அவுஸ்திரேலியா தானே...........
அப்படியே இதையும் பாருங்க........ ஒக்டோபஸ் என்ன ஒக்டோபஸ் நம் ஊர் கிளிகளுக்கும் பார்க்கத் தெரியும் பாருங்கோ...

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

16 கருத்துகள்:

Subankan சொன்னது…

நான் அறிந்தவரை பெரியகணவாய்களுக்கு (ஒக்டோபஸ்) நிறத்தைப் பிரித்தறியும் ஆற்றல் இல்லை.

http://rkguru.blogspot.com/ சொன்னது…

அக்டோபஸ் உண்மையாய் தெரிவித்த்தீர்கள்.......முட்டாள்களின் சாயம் வெளுத்தது...பதிவு மிக அருமை வாழ்த்துகள்

கவி அழகன் சொன்னது…

நிறத்திற்கும் வெற்றிப்பட்டங்களிற்கும் ஒரு தொடர்பிருக்கிறது. கிரிக்கேட்டிலும் பாருங்கள் எப்படி அடிமட்டத்தில் இருந்தாலும் கடைசியில் முன்னுக்கு வருவது அவுஸ்திரேலியா தானே...........

எப்படி சொல்லுறதெண்டு தெரியல உண்மையா பொய்யா எல்லாம் ஒரு நம்பிக்கை தான்

Unknown சொன்னது…

அருமை அருமை அக்டோபஸ் பற்றி மேலும் அறிய ஆவல்

Unknown சொன்னது…

ஓட்டும் குத்தியாச்சு

Chitra சொன்னது…

yellow.... interesting....mmm....

ம.தி.சுதா சொன்னது…

@ Subankan said...
//..நான் அறிந்தவரை பெரியகணவாய்களுக்கு (ஒக்டோபஸ்) நிறத்தைப் பிரித்தறியும் ஆற்றல் இல்லை..//
தகவலுக்கு நன்றி சுபா... சாத்திரம் என்பது என்ன என்று தெரியும் தானே.. பலரை ஒப்பிட்டு ஒரு பொது எடுகோள் எடுக்கப்படுவது தான்... மாட்டுக்கு கூட நிறப்பிரிகை இல்லை ஆனால் காளை அடக்கலுக்கு இப்போதும் சிவப்பு துணி தான் பாவிக்கிறாங்க... எல்லாம் ஒரு நம்பிக்கை தான்..

ம.தி.சுதா சொன்னது…

@ rk guru said...
//..முட்டாள்களின் சாயம் வெளுத்தது...பதிவு மிக அருமை வாழ்த்துகள்..//
நன்றி சகோதரா....

ம.தி.சுதா சொன்னது…

@ யாதவன் said...
//..எப்படி சொல்லுறதெண்டு தெரியல உண்மையா பொய்யா எல்லாம் ஒரு நம்பிக்கை தான்..//
உண்மை தான் அண்ணா.. நன்றிகள்.

ம.தி.சுதா சொன்னது…

@ மகாதேவன்-V.K said...
//...அருமை அருமை அக்டோபஸ் பற்றி மேலும் அறிய ஆவல்..//
வருகைக்கும் வாழ்த்துக்கும் ஓட்டுக்கும் மிக்க நன்றி.... தகவலை சேகரித்து விட்டு நிச்சயம் தெரிவிக்கிறேன்..

ம.தி.சுதா சொன்னது…

@ Chitra said...
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி... அக்கா..

anuthinan சொன்னது…

எப்படி எல்லாம் யோசிகிறிங்க????

அஆனாலும், ஏதோ ஒரு தொடர்பு இருக்குது!!!

ம.தி.சுதா சொன்னது…

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அனு.....
இந்த கட்டுரையில் என் பங்கு அரைவாசி தான்....

KANA VARO சொன்னது…

வித்தியாசம் வித்தியாசமா தேடுறீங்க...

ம.தி.சுதா சொன்னது…

மிக்க நன்றி வரோ...

ச.சரவணன், சொன்னது…

தங்களுக்கு நன்றி நண்பரே...

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்

back to top