வியாழன், 26 ஆகஸ்ட், 2010

கறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு.........

பிற்பகல் 10:35 - By ம.தி.சுதா 40

                                                 இது எனது ஒரு அனுபவப் பகிர்வுக்கட்டுரை. பழைய ஞாபகங்களை இதமாக மீட்டி நான் அறிந்திருக்கும் நல்ல விசயமொன்றை எல்லோர் பார்வைக்கும் தருகிறேன்.
                                                நீங்க நினைக்கும் அளவுக்கு நான் பெரிய சமையல்காரனல்ல ஏதோ உண்பவர் முகம் சுழிக்காமல் உண்ணுமளவுக்கு சமைக்கத் தெரியும். கோயில் அன்னதானம் போன்ற பெரிய சமையல்கள் என்றால் இன்னும் கறுத்திடுவேனோ என்று ஒரு சின்ன பயம் இருந்தாலும் நீண்ட அகப்பை கிடைத்தால் அன்று நானும் ஒரு வியர்க்காத சமையல் காரன் தான்.
                                                   
அன்றைய நாட்களில் எம் விடுதிகளில் குழுக்களாகப் பிரிந்து சமைப்போம். ஒரு குழுவில் 6 பேர் இருப்பார்கள். எம் குழுவில் 4 பேர் தான். அதி காலை எழுந்து 56 பேருக்கும் சமைத்து வைத்து விட்டு வகுப்பிற்கு போவோம். இந்த இடை நேரத்தில் யாரோ ஒரு புல்லுருவி பொறாமையின் நிமித்தம் அடுத்த நாளுக்கான உப்பையும் அள்ளிப் போட்டுவிடும் (யாரோ என்னங்க நாமளும் பழி வாங்குவதற்காகப் போடுவதுண்டு). இப்படி சில நாள் போகையில் சிலர் உப்பை போடாமல் சமைத்து விட்டு பின்னர் சாப்பிடும் போது போட்டு தருவார்கள். அது சேர்ந்தும் சேராமலும் கறியின் ருசியைக் கெடுத்துவிடும். (யாரும் சோற்றுக்குள் போட மாட்டோம் ஏனென்றால் அது பொறுப்பானவர்களுக்கு போகும் ஒரு உணவுப் பொருள்).
                                                     இத்தனைக்கும் நாங்கள் சமைக்கும் கறி மட்டும் இந்தச் சிக்கலுக்குள் மாட்டுப்பட்டதே இல்லை. எனக்கு மட்டும் தெரிந்த ஒரு ரகசியம் தான் காரணம். உண்மையில் அது எனக்க மட்டும் தெரிந்ததல்ல மற்ற நால்வருக்கும் தெரியும். ஆனால் அதை இப்போது என் மற்ற நண்பருக்கு சொல்வதற்கு ஒருவன் தான் உயிரோடிருக்கிறான். இத்தனைக்கும் மற்றவர் சிலரது சுற்றில் உப்பு கூடினாலும் நாம் பேசாமல் பல்லைக்கடித்துக் கொண்டு தின்போம் காரணம் ரகசியம் வெளியில் போனால் எமக்கிருக்கும் மதிப்பு குறையும் என்று அவன் விட மாட்டான். (எப்படீப்பா சொல்லுவோம் ஏனென்றால் நாங்க தமிழரல்லவா...? எமக்கு மூக்கு போனாலும் எதிரிக்கு சகுனம் பிழைக்கணும்).
                                                      சரி ரகசியத்தை சொல்லவா........ எல்லாரும் ஒருமுறை கண்ணை மூடி என் சமையல் குல தெய்வத்தை கும்பிட்டுக் கோங்கோ...... கும்பிட்டாச்சா அட போங்க பேமானிகளா..... யாராச்சும் செய்தித் தாளைப் போய் கும்பிடுவாங்களா.....
                                                           கறிக்கு உப்பிக் கூடிடிச்சுன்னா.... கறியை அடுப்பில் ஏற்றுங்க பின்னர் ஒரு சாதாரண செய்தித் தாழை எடுத்து அப்படியே கசக்கி ஒரு உருளையாக்குங்க. அந்த உருளையை கறிக்குள் இட்டு 4-5 நிமிடம் கறியை சூடாக்குங்கள். பின்னர் அந்த பத்திரிகையை எடுத்து விட்டு கறியை சுவைத்துப் பாருங்கள். இப்பொழுதும் உப்புக் கூடவா மீண்டும் ஒரு முறை செய்யுங்கள். கறி இப்போது உங்கள் தேவைக்கேற்ற உப்புடன் சுவை தரும். செய்து பாருங்க... அப்படி சரி வரலியா என் தளத்தை திறந்து விட்டு விளக்கு மாறை (துடப்பங்கட்டையை) எடுத்து ஒரு சாத்து சாத்துங்க.....
                                                     பொறுங்க எங்க போறிங்கள் கருத்திடலியா...... சரி பரவாயில்லை உச்சிப்பகுதிக்குப்போய் உள்ள கருத்துப் பொட்டியில் நல்லாயிருக்குண்ணு ஒரு சொடுக்கல் சொடுக்குங்க........ 5 செக்கன் வேலை..... அதுவும் சிரமமா.... மீண்டும் என் ஓடையில் வந்து நனைந்திட்டுப் போங்க......

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

40 கருத்துகள்:

thamizhparavai சொன்னது…

ரொம்ப நன்றிங்க...உண்மையிலேயே என்னை மாதிரி அப்ரசெண்டி சமையல்கார பேச்சிலர்களுக்கு உபயோகமாக இருக்குமென நினைக்கிறேன்.
கறின்னு நீங்க சொன்னது காய்கறிகள்தானே... அப்படியெனில் அசைவக்கறிக்கும் இதைப் பயன்படுத்தலாமா?

ம.தி.சுதா சொன்னது…

@ தமிழ்ப்பறவை said...
வருகைக்கு நன்றி சகோதரம்.... நிச்சயமாக நீங்கள் உபயோகிக்கலாம். காகிதங்களுக்கு அகத்துறிஞசும் இயல்பு இருக்கிறது. அதாவது பரவல் மூலம் செறிவு கூடிய இடத்திலிருந்து செறிவு குறைந்த இடத்திற்கு பதார்த்தங்கள் பரிமாறப்படும் என்பது விஞ்ஞான விளக்காகும்.

Jaleela Kamal சொன்னது…

எப்பா என்னா ஒரு விளக்கம்

ம.தி.சுதா சொன்னது…

@ Jaleela Kamal said...
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரம்.

யூத்ராசு சொன்னது…

அருமை..
ஏனுங்க... செய்தித்தாள் மட்டும்தானா.. இல்ல சாதாரண தாள்களும் பயன்படுத்தலாமா?

ம.தி.சுதா சொன்னது…

@ யூத்ராசு said...
நான் விளக்கல் சுகத்திற்காகத் தான் அப்படிக் கூறினேன் சகோதரம். மெழுகு சாராத காகிதம் என்றால் சரி தான்...

ம.தி.சுதா சொன்னது…

@ Jaleela Kamal said...
அடடா இப்பத்தான் பார்த்தேன் சமையல் உலகின் ராணியே நம்ம ஓடையில் நனைந்து போயிருக்காங்க நன்றிகள்..

Unknown சொன்னது…

ஆகா ஐடியா நல்லாத்தான் இருக்கு ஆனால் செய்தித் தாளில் உள்ள மை (இங்) உணவோடு கலக்கும் போது அவ்வளவு நல்லதல்ல உடலுக்கு இதைவிட உருளைக் கிழங்கை வெட்டிப் போடலாமே கறியின் உப்பும் குறையும் சுத்தமாகவும் இருக்கும்.

ம.தி.சுதா சொன்னது…

@ மகாதேவன்-V.K said...
நீங்க சொல்வது சரிதான் சகோதரா.. ஆனால் எம்மைப்போல் விடுதியில் இருக்கையில் சாத்தியப்படாது. ஏனென்றால் அவர்கள் தருவதை வைத்துத் தான் சமாளிக்கணும்.

Unknown சொன்னது…

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது போல என்ன செய்வது சூள்நிலமைக்கு ஏற்றவாறு பயன்படுத்த வேண்டியதுதானே
நன்றி சகோதரி

ம.தி.சுதா சொன்னது…

@ மகாதேவன்-V.K said...
நன்றி.. சரியாகப் புரிந்து கொண்டீர்கள்..

ரொம்ப நன்றிங்க...உண்மையிலேயே என்னை மாதிரி அப்ரசெண்டி சமையல்கார பேச்சிலர்களுக்கு உபயோகமாக இருக்குமென நினைக்கிறேன்.

Unknown சொன்னது…

முதல் பின்னுட்டம் இடும்போதே சரியாக புரிந்துகொண்டுதான் இட்டேன் உணவல்லவா யாருக்குத்தான் அவதானம் இருக்காது எதுவானாலும் உங்கள் பதிவு மூலம் பல விளக்கங்கள் கிடைத்துவிட்டது அப்படியே இப்பதிவுக்கு ஓட்டும் குத்திவிட்டேன் தொடர்க உங்கள் ஆக்கங்கள் உங்கள் பாதையில்.....

ம.தி.சுதா சொன்னது…

@ சே.குமார் said...
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரா.....

ம.தி.சுதா சொன்னது…

மகாதேவன்-V.K said...
மிக்க நன்றி சகோதரா...

Chitra சொன்னது…

எனக்கும் சேர்த்து வாழை இலை ஒன்று போடுங்க..... நியூஸ்பேப்பர் ல செய்தி உப்பு சப்பு இல்லாமல் இருக்குது என்று சொன்னாக் கூட இப்படி செய்யலாமா? ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

Chitra சொன்னது…

Thank you for inviting me to your blog site. (Followed)

மு.லிங்கம் சொன்னது…

தம்பி உங்க கட்டுரை அல்லது ஆக்கம் மிகவும் நல்லாய் இருக்கு..
வசன நடை சுவாரஸ்யமாக அதாவது வாசிக்கிறவங்களை கவரக்கூடிய முறையில் அமைக்கப்பட்டிருக்கு...
பாராட்டுக்கள்..

இருந்தாலும் கட்டுரையிலை தெரிவிக்கப்பட்டிருக்கும் விடயத்தை முக்கியமாக காகிதத்தை உணவுக்குள்ளை போட்டு சூடாக்கிற விடயத்தை சுகாதார முறைப்படி ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல...
என்னைப் பொறுத்தவரையில் உப்புக்கூடினாலும் பரவாயில்லை என்று சாப்பிடுவேனே ஒழிய உந்த முறையை கையாளவே மாட்டன்.
அதற்காக நானொரு உப்புப்பிரியன் என்று தப்பாக எண்ணியிடாதையுங்கோ..அப்போ நான் போய்வரவா???

நன்றி....
மு.லிங்கம்.

அன்பு நண்பன் சொன்னது…

நண்பா எனக்கு தேநீர் வைப்பதை தவிர சமையல் அறையில் வேறு எந்த விடயமும் தயாரிக்க தெரியாது, ஆனால் {நன்றாக சாப்பிடுவன்}, நீங்கள் சொன்ன விடயம் நமக்கு வருங்காலத்தில் உதவும்......

http://rkguru.blogspot.com/ சொன்னது…

அருமை பதிவு

மாயாவி சொன்னது…

//ஆகா ஐடியா நல்லாத்தான் இருக்கு//

இல்லையே!!


//ஆனால் செய்தித் தாளில் உள்ள மை (இங்) உணவோடு கலக்கும் போது அவ்வளவு நல்லதல்ல உடலுக்கு இதைவிட உருளைக் கிழங்கை வெட்டிப் போடலாமே கறியின் உப்பும் குறையும் சுத்தமாகவும் இருக்கும்//

சரியான தீர்வு!

ம.தி.சுதா சொன்னது…

@ Chitra said...
//..நியூஸ்பேப்பர் ல செய்தி உப்பு சப்பு இல்லாமல் இருக்குது என்று சொன்னாக் கூட இப்படி செய்யலாமா? ..//
ஆம் அக்கா.. வருகைக்கு நன்றி.. தங்கின் வேலைப் பழுவில் எனக்காக நேரம் ஒதுக்கியதற்காகவும் சேர்த்துத்தான்.

ம.தி.சுதா சொன்னது…

@ mainthan said...
//..வசன நடை சுவாரஸ்யமாக அதாவது வாசிக்கிறவங்களை கவரக்கூடிய முறையில் அமைக்கப்பட்டிருக்கு..
பாராட்டுக்கள்..//
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிகள் அண்ணா..

ம.தி.சுதா சொன்னது…

@ உங்கள் அன்பு நண்பன் RA.Dinushan said...
//..நீங்கள் சொன்ன விடயம் நமக்கு வருங்காலத்தில் உதவும்...//
வருகைக்கு நன்றி சகோதரா... அம்மாவிடம் வருகிறேன் பொறுங்கள்.

ம.தி.சுதா சொன்னது…

@ rk guru said...
வருகைக்கு நன்றி சகோதரா...

ம.தி.சுதா சொன்னது…

@ மாயாவி said...
வருகைக்கு நன்றி சகோதரா...
முன்னரே சொன்னேன் அல்லவா... விடுதிச்சாப்பாடு என்றாலே வாயில் வைக்க முடியாது... அவர்கள் தருவதை வைத்து தான் சமாளிக்கணும்... அப்படியானால் இது பரவாயில்லை தானே..

Butter_cutter சொன்னது…

nesamavaa sollareenga?
engalavachsu kaamadi onnum pannalia?

ம.தி.சுதா சொன்னது…

@ winstea said...
//..engalavachsu kaamadi onnum pannalia?..//
சகோதரா நான் ஏன் மற்றவரை ஏமாற்றி புகழ் தேடணும். மற்றவர் வட்டத்தில் என்னையும் சேர்த்திடாதிங்க.... இது எனது சொந்த அனுபவம்.

பிரியமுடன் priya சொன்னது…

நல்ல குறிப்பு. வாழ்த்துக்கள்

priya @ http://tipstoslim.blogspot.com/

ம.தி.சுதா சொன்னது…

@ priya said...
வருகைக்கும் வாழ்த்தக்கும் நன்றி பிரியா...

Ramarajan சொன்னது…

என்னத்த உருளையாக்குங்கள்..?

நீ உன்மையாவே ஒன்னு சொல்லிருக்க.
உருளைய வேக வச்சு போட்டா. கண்டிப்ப உப்பு குறையும்.

ம.தி.சுதா சொன்னது…

@ Ramarajan said...
அப்ப நீங்களும் அனுபவப்பட்டிட்டிங்க போல... தள வருகைக்கு நன்றி சகோதரா....

புதிய தகவல் தான். ஆனால் சில நண்பர்கள் சொன்னது போன்று நியூஸ் பேப்பரை குழம்பில் போட்டு கலக்குவது நம் ஆரோகியத்திற்கு கேடு விளைவிக்கும் அல்லவா நண்பரே?

ஆரோகியத்திற்கு கேடு விளைவிக்காத வேறு ஏதாவது இருந்தால் சொல்லுங்கள். மக்களுக்கு பயனாக இருக்கும்

தொடருங்கள்! ஆனால் மிகவும் கவனமுடன். எல்லா விஷயங்களையும் பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளதே. அதை சொன்னேன்

ம.தி.சுதா சொன்னது…

@ என்னது நானு யாரா? said...
வருகைக்கு நன்றி சகோதரம்.... ஆரோக்கியம் சம்பந்தமாக நீங்க சொல்வது சரி தான் ஆனால் செலவற்ற தீர்வு தானே எங்களுக்கு சரி....

முயற்சி நன்றாக இருக்கிறது அண்ணா.ஆமா எப்படி செலவில்லாமல் கறியை சூடாக்குவது.............?அதனையும் கொஞ்சம் சொல்வீர்களானால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பெயரில்லா சொன்னது…

salt dips good.the samme as like news paper< you put potatoes and boiled it it wsill work out.
thanks
Vetha Elankathilakam.
Denmark.

karthi சொன்னது…

அந்தப்புரம் சின்னவீடு வித்தியாசம் அறிந்தேன்

ம.தி.சுதா சொன்னது…

சித்தாரா மகேஷ். said...

வீட்டுக்கு வா தங்கா செதல்லித் தாறன்...

ம.தி.சுதா சொன்னது…

kovaikkavi said...

நன்றி அம்மா..

செலவற்ற தேவையல்லவா எமக்கிருந்தது...

ம.தி.சுதா சொன்னது…

karthi said...
அந்தப்புரம் சின்னவீடு வித்தியாசம் அறிந்தேன்

-------------

அப்பாடி தப்பிச்சேன் சகோ..

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்

back to top