Tuesday, 3 August 2010

சோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.

                                         எம் தமிழரின் அறிவிற்கு எத்தனையோ கண்டுபிடிப்புக்களை பிடிக்க வேண்டியவர்கள். தம்மின மோதல்களால் மாட்டைக் கூட பிடிக்க முடியாது இருக்கிறார்கள்.

தேவைகள் தான் புதுக் கண்டுபிடிப்புக்களை தோற்றுவிக்கும். அதன் விளைவுகளில் ஒன்று தான் இது. வன்னித் தடுப்பு முகாம்களில் நாம் இருந்த காலத்தில் மதுபானத்திற்கு முற்றாக தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஒரு சிலர் வைத்தியசாலை சென்று வரும் போது இளநீரை உறிஞ்சியால் எடுத்து விட்டு அதற்குள் மதுபானத்தை விட்டு வருவார்கள். பலரிடம் அது வாங்குமளவிற்கு பணமிருப்பதில்லை. அதனால் தன் இப்படி ஒரு வழிக்கு இறங்கினார்கள். இனி செய்முறையை சுருக்கமாகப் பார்ப்போம்.


சமையல் கூடத்தில் எஞ்சிய சோற்றை சேகரித்து அதை ஒரு பாத்திரத்தில் இட்டு 2” உயரத்திற்கு நீர் ஊற்றி குறைந்தது 5 நாளைக்கு ஊற வைக்க வேண்டும். அத்துடன் ஒவ்வொரு நாளும் கைகளால் பிசைந்து அதை கூழாக்க வேண்டும். 5 நாட்களும் ஒரு சிறு துளையிட்ட மூடியால் அதை மூடி வைக்க வேண்டும் (துளையில்லாவிடில் அமுக்கத்தில் எல்லாம் சீறி வெளியே பறந்து விடும்).

பின்னர் அதை ஒரு வடியால் வடித்து வரும் திரவத்தை மீண்டும் ஒரு பாத்திரத்தில் இட்டு கழிவுகள் கீழே படியும் வரை விடவேண்டும். அதன் பின் தான் மிக முக்கிய செயற்பாடொன்று நடக்கும். தெளிந்த அந்த நீரை எடுத்து அதன் மேல் சிறிதளவு சீமேந்து தூவுவார்கள். இறுதியாக தான் தெளிந்த திரவம் ஒன்று கிடைக்கும் இது தான் நம்மவர் மதுபானம். இது பனங் கள்ளுக்கு சமமானது.

அடுத்த பதிவில் இன்னும் ஒரு மதுபானத்தயாரிப்பு சொல்கிறேன். அது மிகவும் இலகுவானது ஆனால் சாராயத்தை விட வீரியம் கூடியது. சென்ற தீபாவளியன்று எம் முகாம் பகுதியில் மட்டும் 225 லீற்றர் மதுபானம் பிடித்துக் கொடுத்தோம்.

என்னங்க சோற்றுக் கள்ளு புளிக்குதா? எனக்கு உங்க ஆதரவுதான் இனிக்கும்.

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

10 comments:

தமிழன் வாழ்க :):)

சுதா அப்படியே தமிழன் வாழவும் வழி சொல்லலாமே

Unknown said...

வன்னீல வெற என்ன வெல்லாம் கண்டுபிடிச்சீங்க

ரவி said...

சிமெந்துன்னு சொன்னா என்ன ? சிமெண்ட்டா ? சென்னையில் ஏற்கனவே சோற்றில் இருந்து சுண்டக்கஞ்சி தயாரிக்கிறார்களாமே ?

neenga romaba late. sundakkanji kantupidichu romba naal aachu. :)

@ கார்த்தி அது தான் என் ஆசையும்.

@ வம்பா உந்த வம்பில எனை ஏன் மாட்டுறாய்

@ சஞ்சேய் அடுத்த பதிவுகளில் இன்னும் எதிர் பாருங்க

@ ரவி, சங்கர் வருகைக்கு மிக்க நன்றி. சுண்டக்கஞ்சியை விட இது கொஞ்கம் வீரியம் கூடியதாம். எல்லாம் பக்டீரியாவின் விளையாட்டு தாங்கோ.... ரவி நான் சொன்னது சிமென்ட் பற்றித்தான். எழுதும் போது யாழ் பேச்சு வழக்கில் எழுதிவிட்டேன்.

Unknown said...

கலவை குறிப்பு சொல்லாமல் விட்டுவிடீர்களே, எவ்வளவு சோறு?, எவ்வளவு தண்ணீர்?, எவ்வளவு சிமிண்ட்???????????????

Total Pageviews

Followers

என் குறும்படங்கள்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்

back to top