செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் ஆலயம்)

பிற்பகல் 2:05 - By ம.தி.சுதா 36


           இந்தப் பதிவு முடிவல்ல ஒரு ஆரம்பமாகும். எனக்குப்பிடித்த கவிஞர்களில் ஒருவரான கண்ணதாசனில் இருந்தே ஆரம்பிக்கிறேன்.
                பிரபலங்களிடையே ஒரு இறுமாப்பு, ஆணவம், தலைக்கனம் என்று எந்தச் சொல்லைச் சொல்வதென்று தெரியவில்லை ஆனால் இதில் ஒன்று இருக்கிறது என்பது உண்மை. அத்துடன் பிரபலமானவர்கள் என்று தம்மை எண்ணிக் கொள்பவர்களிடம் இது மிக மிக அதிகமாகவே இருக்கிறது. உதாரணக்துக்கு வதனப் புத்தகம் (facebook) பார்த்தால் தெரியும். வந்து பதிவிட்டுப் போவர்கள் ஆனால் தமக்கு ஏதோ நேரம் என்பதே இல்லையாம். வேலை இல்லாத விசரர்களை பின்னால் வாருங்கள் என்பது போல போவார்கள். ஆனால் யாராவது காரசாரமாகப் பதிலிட்டால் அடுத்த கணம் மறுப்பு அறிக்கை விடுவார்கள். அப்படியானால் என்ன அர்த்தம் அவர்கள் எம்மைப் போல் விசரர்களைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இப்படியானவர்களை எல்லேரும் புறக்கணித்தால் என்ன..?
          
சரி அது ஒரு பக்கமிருக்கட்டும். விசயத்திற்கு வாருங்கள். எம்.எஸ். விஸ்வநாதனுக்கம் கண்ணதாசனுக்கும் இடையில் ஏதோ கருத்து வேறுபாடு இருவரும் பிரிந்து கொண்டார்கள். அனால் அவர்களுக்கிடையே யான பாசப்பிணைப்ப முத்து ராமனின் நெஞ்சில் ஓர் அலயம் படத்தில் மீண்டும் சேர்த்த்து.
           அதில் ஒரு காட்சி முத்து ராமனை நொக்கி நாயகி பாடும் பாடல் ஒன்று இடம் பெற்றிருந்தது. ஆனால் அப்படிச் சொல்வது தப்பு எம்.எஸ். விஸ்வநாதனை நோக்கி கண்ணதாசன் பாடுவது போலவெ பாடல் அமைந்திருந்த்து. இந்த வரியைப் பாருங்கள்..... 

“//”---<….>----“//” சொன்னது நீ தானா

சொல் சொல் சொல் என் உயிரே “//”---<….>----“//”

“//”---<….>----“//” என்னொரு கைகளிலே
யார் யார் யார் நானா
எனை மறந்தாயா “//”---<….>----“//”

“//”---<….>----“//” தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை
தெருவினிலே விழலாமா
தெருவினிலே விழுந்தாலும்
வேறோர் கை தொடலாமா
“//”---<….>----“//”

            கண்ணதாசனின் சிறப்பியல்புகளில் இதுவுமொன்று சம்பவங்களைக் கொண்டு சிலர் கதை வரைவது போல இவர் கவி வரைந்தவிடுவார்.
            இவர் பற்றி இசைஞானி சொன்னதை ஒருமுறை பாருங்கள்.“மனுசன் வந்தாரு என்னப்பா ரெடியா என்றார் ஒரு சிகரெட்டை எடுத்து மூட்டிக் கொண்டு சரி ரியுனை சொல்லு என்றார். நானும் ஆலாபனையை பாடிக்காட்டினேன். அதற்குள் இரண்டு தரம் ஆஸ் ட்ரேயில் சிகரெட்டை தட்டிவிட்டு மீண்டும் ஒரு முறை கேட்டார். எனக்க என்னடா என்றாகிவிட்டது. மீண்டும் பாடினேன். இப்ப அவர் சொன்னார். சரி இந்தா இதைப் பாடு... தேன் சிந்துதே வானம் எனை உனை தாலாட்டுதே... பாடிப் பார்த்தேன் ஒர அச்சப்பிசகாமல் அப்படியே பொருந்தியது. அவர் முதலே கவிதை எழுதிவைத்தது போலத்தான் சொல்லுவார்என்றார்.
           சரி நெஞ்சில் ஓர் ஆலயம் பாடலை முழுமையாகப் பாருங்கள். எம்.எஸ்.வி ன் இசையில் பி.சுசிலா படித்த பாடல்.
பிடித்திருந்தால் சில நாழிகைகள் செலவழித்து ஒரு ஓட்டுப் போட்டுப் போங்கள்.

சொன்னது நீ தானா
சொல் சொல் சொல் என் உயிரே
சொன்னது நீ தானா
சொல் சொல் சொல் என் உயிரே
சம்மதம் தானா
ஏன் ஏன் ஏன் என் உயிரே
ஏன் ஏன் ஏன் என் உயிரே
சொன்னது நீ தானா
சொல் சொல் சொல் என் உயிரே

என்னொரு கைகளிலே
யார் யார் யார் நானா
எனை மறந்தாயா
ஏன் ஏன் ஏன் என் உயிரே
சொன்னது நீ தானா
சொல் சொல் சொல் என் உயிரே

மங்கள மாலை குங்குமம யாவும்
தந்ததெல்லாம் நீ தானே
மணமகளை திருமகளாய்
நினைத்ததெல்லாம் நீ தானே
என் மனதில் உன் மனதை
இணைத்ததும் நீ தானே
இறுதி வரை துணை இருப்பேன்
என்றதும் நீ தானே
இன்று சொன்னது நீ தானா
சொல் சொல் சொல் என் உயிரே

தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை
தெருவினிலே விழலாமா
தெருவினிலே விழுந்தாலும்
வேறோர் கை தொடலாமா
ஒரு கொடியில் ஒரு முறை தான்
மலரும் மலரல்லவா
ஒரு மனதில் ஒரு முறை தான்
வளரும் உறவல்லவா
சொன்னது நீ தானா
சொல் சொல் சொல் என் உயிரே
பிடித்திருந்தால் சில நாழிகைகள் செலவழித்து ஒரு ஓட்டுப் போட்டுப் போங்கள்.

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

36 கருத்துகள்:

ஸ்ரீ.கிருஷ்ணா சொன்னது…

வாழ்த்துக்கள்....

ம.தி.சுதா சொன்னது…

@ புதிய மனிதா said...
வருகைக்கம் வாழ்த்தக்கும் மிக்க நன்றி புதிய மனிதா....

Unknown சொன்னது…

ஓட்டுப் போட்டாச்சு

நல்ல பதிவு தொடருங்கள்

Lingeswaran சொன்னது…

Sandhegamae illaamal adhu super paattu...nanbarae..

Riyas சொன்னது…

நல்ல பதிவு நல்ல பாடல்..

கண்ணதாசன் பாடல்கள் என்றால் சும்மாவா.. தொடர்ந்து எழுதுங்கள்

ம.தி.சுதா சொன்னது…

@ மகாதேவன்-V.K said...
சகோதரா மிக்க நன்றி எமக்குள் ஏதோ பூர்வ ஜென்ம பந்தமிருக்கிறதா...?

ம.தி.சுதா சொன்னது…

@ Chitra said...
அக்கா மிக்க நன்றி...

http://rkguru.blogspot.com/ சொன்னது…

கண்ணதாசனின் கவி வரிகளின் ஆழத்தை நன்கு புரிந்து வைத்துள்ளீர்கள்....உங்கள் புரிதல் மிகவும் ஆழமானது வாழ்த்துகள் சகோதரி

ம.தி.சுதா சொன்னது…

@ Lingeswaran said...
மிக்க நன்றி சகோதரா...

ம.தி.சுதா சொன்னது…

@ Riyas said...
என்ன வென்று சொல்வது... நன்றி..நன்றி..நன்றி...

ம.தி.சுதா சொன்னது…

@ rk guru said...
நன்றிகள் சகோதரா...

அன்பு நண்பன் சொன்னது…

நன்றாக அருமையான பதிவாக இட்டுள்ளீர்கள்,, வாழ்த்துக்கள் நண்பா

சிறுகூடல்பட்டி கவிஞரின் பாடலை பகிர்ந்தமைக்கு நன்றி. இனி வரும் பதிவுகளில் முடிந்தால் வீடியோ (கிடைத்தால்) இணைக்கவும்.
வாழ்த்துக்கள்.

balavasakan சொன்னது…

நல்ல அருமையான பகிர்வு !! நிறைய எழுதுங்கள்

அம்பிகா சொன்னது…

பி.சுசீலாவின் இனிய குரலுக்காகவும், நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் அழகான வரிகளுக்காகவும் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். நல்ல பகிர்வு. நன்றி சகோதரி.

ம.தி.சுதா சொன்னது…

@ உங்கள் அன்பு நண்பன் RA.Dinushan said...
வருகைக்கு நன்றி சகோதரா..

ம.தி.சுதா சொன்னது…

@ சே.குமார் said...
//...இனி வரும் பதிவுகளில் முடிந்தால் வீடியோ (கிடைத்தால்) இணைக்கவும்...//
முயற்சிக்கிறேன் சகோதரா.... சிலவேளை இவற்றால் தளம் திறக்கப் பிந்தலாம். அதனால் தொடுப்பையாவது கொடுக்கிறேன்.

ம.தி.சுதா சொன்னது…

@ Balavasakan said...
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி என் வைத்திய நண்பா...

ம.தி.சுதா சொன்னது…

@ அம்பிகா said...
//...பி.சுசீலாவின் இனிய குரலுக்காகவும், நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் அழகான வரிகளுக்காகவும் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்....//
உண்மை சகோதரி. வைரமுத்துவின் கவிதை பார்த்தீர்களா..? மரணம் வீதிவழி வருகிறதென்றால் என்னை ஒரு அறையில் விட்டு சுசீலாவின் பாடலை இசைக்கவிடுங்கள் என்கிறார்...

Unknown சொன்னது…

இந்த பதிவுக்கு வாழ்த்துக்கள் , மேலும் எனது வலை பதிவுக்கு வந்து வாழ்த்தியதற்கு நன்றிகள் பல

Lingeswaran சொன்னது…

" Then sindhuthae vaanam..." paadal kamalum, jayachitravum paaduvaargalae....andha paadal thaanae....? Nanbarae..
It is one of my favourites..

வாழ்த்துக்கள் ...,நம் கவிபேரரசு பாட்டு ,அது என்ன ''' பிடித்திருந்தால்''......,பிடிக்கலேன்னா மனுஷனே கிடையாது :)

ARV Loshan சொன்னது…

அருமையான பாடல். நல்ல பதிவு

ம.தி.சுதா சொன்னது…

@ THE PEDIATRICIAN said...
தடம் அறிந்து வந்ததற்கு மிக்க நன்றி சகோதரா..

ம.தி.சுதா சொன்னது…

@ Lingeswaran said...
ஆம் சகோதரா படம் தான் நினைவிற்கு வரல... வந்ததும் சொல்கிறேன்...

ம.தி.சுதா சொன்னது…

@ பனங்காட்டு நரி said...
உண்மை தான் சகோதரா நல்லது எங்கிருந்தாலும் மதிப்பு தானே...

ம.தி.சுதா சொன்னது…

@ LOSHAN said...
அண்ணா தங்களின் வேலைப்பழுவிலும் வருகை தந்து வாழ்த்திச் சென்றமைக்கு மிக்க நன்றி...

Abhi சொன்னது…

அருமையான பதிவு

அ.சந்தர் சிங். சொன்னது…

kannadhasanai patri ezhuthugireergal.

vaazhththukkal.

ungal vaazhvu valam perum.

ம.தி.சுதா சொன்னது…

@ Abhi said...
//..அருமையான பதிவு..//
நன்றி சகோதரம்...

ம.தி.சுதா சொன்னது…

@ cs said...
//...kannadhasanai patri ezhuthugireergal.
vaazhththukkal.
ungal vaazhvu valam perum...//

மிக்க நன்றி சி.எஸ்....

rmkgreat சொன்னது…

"இன்னொரு" கைகளிலே யார் யார் நானா!

"என்னொரு" சரி இல்லை என்று நினைக்கிறேன் நண்பரே!

ம.தி.சுதா சொன்னது…

@ rmkgreat said...
//..."என்னொரு" சரி இல்லை என்று நினைக்கிறேன் நண்பரே!..//
ஆம் சகோதரா கவனிக்கல வருகைக்கும சுட்டிக்காட்டியமைக்கும் மிக்க நன்றி...

Suni சொன்னது…

அருமையான பதிவு. வாழ்த்துக்கள்

ம.தி.சுதா சொன்னது…

Sunitha said...
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி சகோதரி....

Unknown சொன்னது…

அருமையான வரிகள். கண்ணதாசனின் 'நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்' பாட்டிலும் ஆழமான அர்த்தம் உள்ளது...

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்

back to top