Featured Articles
All Stories

Tuesday, 31 August 2010

பாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் ஆலயம்)


           இந்தப் பதிவு முடிவல்ல ஒரு ஆரம்பமாகும். எனக்குப்பிடித்த கவிஞர்களில் ஒருவரான கண்ணதாசனில் இருந்தே ஆரம்பிக்கிறேன்.
                பிரபலங்களிடையே ஒரு இறுமாப்பு, ஆணவம், தலைக்கனம் என்று எந்தச் சொல்லைச் சொல்வதென்று தெரியவில்லை ஆனால் இதில் ஒன்று இருக்கிறது என்பது உண்மை. அத்துடன் பிரபலமானவர்கள் என்று தம்மை எண்ணிக் கொள்பவர்களிடம் இது மிக மிக அதிகமாகவே இருக்கிறது. உதாரணக்துக்கு வதனப் புத்தகம் (facebook) பார்த்தால் தெரியும். வந்து பதிவிட்டுப் போவர்கள் ஆனால் தமக்கு ஏதோ நேரம் என்பதே இல்லையாம். வேலை இல்லாத விசரர்களை பின்னால் வாருங்கள் என்பது போல போவார்கள். ஆனால் யாராவது காரசாரமாகப் பதிலிட்டால் அடுத்த கணம் மறுப்பு அறிக்கை விடுவார்கள். அப்படியானால் என்ன அர்த்தம் அவர்கள் எம்மைப் போல் விசரர்களைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இப்படியானவர்களை எல்லேரும் புறக்கணித்தால் என்ன..?
          

37 comments:

Sunday, 29 August 2010

இலங்கை அரசின் குடிமக்களுக்கு எதிரான புதிய சட்டம்......


Hon. Maithripala Sirisena
Minister of Health
          இது இலங்கைக் குடி மக்களுக்காக சுகாதார அமைச்சு கொண்டு வந்திருக்கும் புதிய சட்ட அமுலாக்கலாகும்.
           போதைவஸ்தால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் அதற்கான மருத்தவச் செலவை ஏற்க வேண்டும் என்று இலங்கையின் சுகாதார சேவைகள் அமைச்சர் எனது மூன்று பாலா தெரிவித்துள்ளார். அடடா குழம்பீட்டிங்களா நான் தமிழில் மொழி பெயர்த்த விட்டேன். அவர் பெயர் மைதிரிபாலா. இந்தச் சட்டம் போதை எதிர்ப்பிற்கு சார்பானதென்றால் எல்லோருக்கும் சந்தோசம் தான் ஆனால் இதனால் பாதிக்கப்படப் போவது குடிமக்களல்ல ஏழைக் குடியானவர்களே.

6 comments:

Friday, 27 August 2010

ஒக்டோபஸ் சாத்திரம் உண்மைதானா? ஆய்வாளர் பார்வையில்...

                                 இது மழை விட்டும் ஓயாத தூறல் பற்றிய கதையாகும். என்ன பலர் பார்த்திருப்பீங்க, கேட்டிருப்பீங்க கேளாதவர்கள் கீழே போங்க...
                               இந்த சாத்திரம் பற்றி பலர் பல கருத்தை தெரிவித்தாலும் இந்தக் கருத்து கொஞ்சம் நம்பக் கூடியதாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் இங்குள்ள படங்களைப்பார்த்தால் தெரியும். இவர்கள் ஒரு பெட்டியில் போட்டி நடைபெறப்போகும் இரு நாட்டினுடைய கொடிகளை வைத்து இதன் தொட்டியில் வைப்பார்கள். ஒக்டோபஸ் எந்த பெட்டியை தொடுகிறதோ அந்த அணி வெல்லும் என்பது நம்பிக்கை. இது பல தடவை சரியாக வந்ததால் அதன் மவுசு கூடிவிட்டது.
                       

16 comments:

Thursday, 26 August 2010

கறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு.........

                                                 இது எனது ஒரு அனுபவப் பகிர்வுக்கட்டுரை. பழைய ஞாபகங்களை இதமாக மீட்டி நான் அறிந்திருக்கும் நல்ல விசயமொன்றை எல்லோர் பார்வைக்கும் தருகிறேன்.
                                                நீங்க நினைக்கும் அளவுக்கு நான் பெரிய சமையல்காரனல்ல ஏதோ உண்பவர் முகம் சுழிக்காமல் உண்ணுமளவுக்கு சமைக்கத் தெரியும். கோயில் அன்னதானம் போன்ற பெரிய சமையல்கள் என்றால் இன்னும் கறுத்திடுவேனோ என்று ஒரு சின்ன பயம் இருந்தாலும் நீண்ட அகப்பை கிடைத்தால் அன்று நானும் ஒரு வியர்க்காத சமையல் காரன் தான்.
                                                   

40 comments:

Wednesday, 25 August 2010

இலங்கையில் குறைந்த செலவில் PHONE கதைக்க ஒரு வழி..!!!


இது பலர் அறிந்து சிலர் அறியாத விடயம் பற்றிய ஒரு சிறிய கட்டுரையாகும்.
            இலங்கையில் 5 ற்கு மேற்பட்ட கைப்பெசி வலையமைப்புக்கள் இருந்தாலும் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு லாபகரமான விடயம் இருக்கிறது. ஒரு சில வலையமைப்பாளர்கள் மற்றவர்களின் வருகையால் வயித்தெரிச்சலை வெளியே காட்டிக் கொள்ளாமல் தமது கட்டணங்களையும் சடுதியாகக் குறைத்துள்ளார்கள்.
             

6 comments:

Friday, 20 August 2010

வெளிச்சத்துக்கு வராத எந்திரன் பாடல்


                   இப்போது அதி பிரபலமாக பேசப்படும் விடயங்களில் ஒன்று எந்திரன் பாடல்கள். ஆனால் எதிர் பார்த்தது போல் அடி மட்ட ரசிகர்களை அவை இன்னும் கவராதது தான் ஆச்சரியமான விடயம். நேற்று ஒரு நண்பனிடம் “ எந்திரன்பாட்டு இறக்கினான் மச்சான் வேணுமா?என்றேன். “இது என்னடா பாட்டு எனக்கென்றால் பிடிக்கலஎன்றான். அவன் சொன்னது எந்தளவுக்கு சரியென்று சொல்லத் தெரியல காரணம் இதே நபர் படம் வந்து மூன்றாவது அல்லது நான்காவது நாள் என்னிடம் வருவான் என்பது நிச்சயம் தெரியும்.

18 comments:

Wednesday, 18 August 2010

எந்திரனை பப்படமாக்கும் சண் ரிவி விளம்பரம்....

                                     மனித மனத்தில் பொதுவாக ஒரு குணம் இருக்கிறது. ஒன்றில் எதிர்பார்ப்ப கூடக் கூட அதில் உள்ள தரத்தையும் அதிகமாக கற்பனை செய்து அதிகமாக எதிர்பார்ப்போம்.
                                கடைசியில் அந்த விடயத்தை அடையும் போது “அட கழுதை இது தான” என்போம். உண்மையில் அந்த விசயம் தரமானதாகத்தான் இருக்கும் அனால் அதை இவனால் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கும்.இது தான் சில பெண் பார்க்கும் இடத்தில் நடந்து மாப்பிள்ளை தலை தெறிக்க ஓடிய கதையும் கேள்விப்பட்டிரப்பீர்கள்.
                                      

15 comments:

Tuesday, 17 August 2010

தமிழ் பற்றி ஒரு ஆய்வு பாகம் -1

                                                               கேட்பதற்கே ஒரு கிளர்ச்சி ஊட்டும் சொல். மனதில் ஏதே பல அலைகளை நாசுக்காக இட்டுச் செல்லும். அந்த அழுத்தத்தாலோ தெரியவில்லை சில தமிழருக்கு இதை பயன்படுத்த பிடிக்கவில்லை.
                                                          ”தமி” என்றால் தனித்துவமானது என்று பொருள் படும் என்று சிலர் கூறுகிறார்கள். என்னைப் பொறுத்த வரை உலகில் தமிழரைத் தவிர வேறு யாராவது ‘தமிழ்‘ என்று சரியாக உச்சரித்தால் நிச்சயம் அவருக்கு ஒரு விசேட உச்சரிப்பாளர் என்ற பட்டம் கொடுக்கலாம். ஏன் என்று நினைக்கிறீர்களா ‘தமிழ்‘ என்ற சொல்லில் வரும் ழகரம் தான் காரணம். நாவின் நுனியை மேல் அண்ணத்தில் ஒரு அழுத்து அழுத்தித் தான் சொல்லலாம். இந்த ழ உச்சரிப்பு உலகிலேயே 3 மொழிகளில் தான் காணப்படுகிறது. தமிழ், மலையாளம், மண்டரின் இன மொழிகள் என்பன தான் அவையாகும்.
                                          

29 comments:

Sunday, 15 August 2010

வன்னி மகளின் புலம்பலை கேட்பாரில்லையோ ......!!!!

அபலை

அம்மா நீ பெற்ற பிள்ளை
இன்று உனைச் சுமக்க
கருப்பையின்றி நிற்கிறது

நீ ஒலிவோயில் பூசிய
கால்களை தடவிப் பார்க்கிறேன்
இன்று எந்த நாய் தின்று
எஞ்சிய என்பாக
கிடக்கிறதோ தெரியாது.


11 comments:

Friday, 13 August 2010

ஆணுறை உருவான கதை (condom)

                                     இது A தரச்சான்றுக்குரிய கதையில்லை

அக்பர் காலத்திற்கு அண்மிய காலத்தில் ஒரு மன்னர் இருந்தார் அவருக்கு மற்ற விசயம் என்றால் போதும் ஏகப்பட்ட பிள்ளைகள் (குபேரன் படத்து மணிவண்ணன் போல) மந்திரியும் சொல்லியே சொல்லிப் பார்த்தார் அரசனால் தவிர்க்க மடியவில்லை. ஆனால் அரசனுக்கும் குழந்தைகள் அதிகமாகப் பிறப்பதில் உடன்பாடில்லை என்பதை உணர்ந்த மந்திரி யோசனை செய்தார். அதன் முடிவில் தான் அவருக்கு இந்த யோசனை கிடைத்தது . மன்னனின் இந்திரியம் போவது தான் சிக்கல் அதைத் தடுத்தால் சரி. ஆனால் அடுத்த பிரச்சனை வந்த அது அரசனுக்கு சுகத்தை கொடுக்க வேண்டும். அத்துடன் அரசிக்கு சௌகரியமானதாகவும் இருக்க வெண்டும். அதன் முடிவாகக் கிடைத்தது தான் ஆணுறையாகும்.

10 comments:

Sunday, 8 August 2010

சாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு

-->
இது யாரையும் கொச்சைப்படுத்த எழுதவில்லை இவ்வளவும் முடிந்த எம்மால் ஏன் வளர முடியவில்லை என்பது தான் என் கேள்வி?
 சரி… இன்று 2 செயன்முறையையும் விளக்குகிறேன். இரண்டும் உடலுக்கு பாரதூரமான விளைவை ஏற்படுத்தக் கூடியது. ஆனால் நாம் முகாமிலிருந்த காலம் வரை யாரும் வைத்தியசாலை வரவில்லை என்பது தான் அதிசயமான விடயம். ஏனென்றால் சென்ற தீபாவளியன்று எம் முகாம் பகுதியில் மட்டும் 225 லீற்றர் மதுபானம் பிடித்துக் கொடுத்தோம். அவ்வளவும் வயிற்றுக்குள் போக வேண்டியது தானே. முக்கியமாக அதன் விலை 1 போத்தல் (750 மில்லி லீற்றர்) 250 இருந்து 500 ரூபாய் வரை இருக்கும்.

20 comments:

Thursday, 5 August 2010

தப்பான முடிவெடுத்ததால் முழி பிதுங்கிய சங்ககார.

                                             நான் சங்காவின் துடுப்பாட்டத்திற்கு அடிமை. ஆனால் அவரது தலைமைத்துவத்திற்கு எதிரானவன். காரணம் அவரது முடிவுகளில் எனக்கு எள்ளளவு உடன்பாடும் இல்லை.
உதாரணம் இன்று சுரேஷ் ரைனா, மிதுன் ஆகியோரை இவ்வளவு ஓட்டம் எடுக்க வைத்தது முடிவுதான்.


8 comments:

Wednesday, 4 August 2010

காயத்ரி மந்திரம் மருத்துவரீதில் சிறந்தது தான்


                  விஞ்ஞான ரீதியில் பார்த்தாலும் இது மிகப் பெரும் உடற்பயிற்சி தான்.
விளக்கம் அடியில் இருக்கிறது.

ஓம் பூர் புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோன: ப்ரசோதயாத்


என்று ஆரம்பிக்கும் இம் மந்திரத்தில் ஏதோ சக்தி இருக்கிறது என்பதை கட்டாயம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். இதை முறையாக ஒரு முறை செய்து பார்த்தால் வாழ்வில் வரும் மாற்றங்களை வைத்து நீங்கள் உணரலாம்.

35 comments:

Tuesday, 3 August 2010

சோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.

                                         எம் தமிழரின் அறிவிற்கு எத்தனையோ கண்டுபிடிப்புக்களை பிடிக்க வேண்டியவர்கள். தம்மின மோதல்களால் மாட்டைக் கூட பிடிக்க முடியாது இருக்கிறார்கள்.

தேவைகள் தான் புதுக் கண்டுபிடிப்புக்களை தோற்றுவிக்கும். அதன் விளைவுகளில் ஒன்று தான் இது. வன்னித் தடுப்பு முகாம்களில் நாம் இருந்த காலத்தில் மதுபானத்திற்கு முற்றாக தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஒரு சிலர் வைத்தியசாலை சென்று வரும் போது இளநீரை உறிஞ்சியால் எடுத்து விட்டு அதற்குள் மதுபானத்தை விட்டு வருவார்கள். பலரிடம் அது வாங்குமளவிற்கு பணமிருப்பதில்லை. அதனால் தன் இப்படி ஒரு வழிக்கு இறங்கினார்கள். இனி செய்முறையை சுருக்கமாகப் பார்ப்போம்.

10 comments:

Total Pageviews

Followers

என் குறும்படங்கள்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்

back to top