சனி, 31 ஜூலை, 2010

சண் ரிவி பார்ப்பதை இழக்கப்போகும் இலங்கையர்கள்.

பிற்பகல் 9:00 - By ம.தி.சுதா 13

                   இது இதுவரை வெளிவராத மறைமுகத் தகவல் ஒன்று இதை முதல் முதல் வெளிக்கொணர்வதையிட்டு பெருமையடைகிறேன். இதில் முதல் பாதிக்கப்படப்போவது இலங்கையின் முதல் தர நகரமாக மாறிவரும் யாழ்ப்பாணமாகும்.
இலங்கைக்கான சண் ரிவி ஒளிவரப்பு உரிமத்தை LBN ( lanka broad band netmork) நிறுவனம் பெற்றுள்ளது. இவர்கள் கொழும்பில் ஒரு பிரபல கேபிள் ரிவி ஒளிபரப்பாளர்கள் ஆகும்.
இவர்களிட்ம யாழுக்கான ஒளிபரப்பு உரிமத்தை U.S hotel  நடத்தும் உரிமையாளர் பெற்றிருக்கிறார். இவர் மாதம் 8000 அமெரிக்க டொலர்களை கட்டியாக வேண்டும். யாழ்குடா நாட்டில் உள்ள அனைத்து கேபிள் ரிவி ஒளிபரப்பாளர்களும் இவரின் கீழ் பதிந்தே ஆக வேண்டும் இல்லாவிடில் சட்டரீதியான நடவடிக்கைக்கு ஆளாக வேண்டியிருக்கும். இது சிறிது காலத்தில் இலங்கை முழுதும் நடைமுறைக்கு வர இருக்கிறது.
இனி தலைப்புக்கு வருவோம். இப்போது பலர் DTH மூலம் தனிப்பட்ட dish வைத்து சண் ஐ பார்க்கிறார்கள். குறிப்பாக (DISH TV, BIG TV, SUN DREACT, VEDIOCON, AIRTEL) போன்ற dish களைப் பாவிக்கிறோம். இதன் திரையில் ஒரு இலக்கம் வருமல்லவா இதைவைத்து தான் அந்த ஒளிபரப்பை தடை செய்வார்கள். இதன் முதற்கட்டமாக 100 பேருக்கு LBN ஆப்பு வைக்கப் போகிறார்கள். இதில் எந்த ஊர்காரரும் மாட்டுப்படலாம். காரணம் அவர்களுடன் dish களை இறக்குமதி செய்த ஒருவரும் கைகோர்த்துள்ளார். இதுவரை யாழில் 12 கேபிள் ரிவி ஒளிபரப்பாளர்கள் US hotel உடன் சேர்ந்திருக்கிறார்கள். இவர்கள் முதல் 3 மாதத்திற்கு ஒரு இணைப்பிற்க 30/- கட்டினால் போதும் அதிலும் 10% இணைப்புகள் கழிவு ஆகும். இதில் US hotel 1400 இணைப்புகளுக்கு மேலே வைத்திருக்கிறது.
இதில் இன்னும் ஒரு முக்கிய விடயம் தமிழன் தன்னால் தான் ஆழிகிறான் என்பதற்கு இது ஒரு எடுத்து காட்டு ஏனெனில் சில மாதங்களுக்கு முன் யாழ்ப்பாணத்தில் கேபிள் ரிவிக்கான சங்கம் ஒன்றை அமைக்க முனைந்து தம்முள் முட்டி மோதிக் கொண்டனர் அதன் விளைவால் 3 ம் நபர் உள்நுழைக்கப்பட்டிருக்கிறார். மொத்தத்தில் தமிழன் என்ற நண்டுப் பெட்டிக்கு மூடி தேவையில்லை.
குறிப்பு - இலங்கையில் பாவிக்கப்படும் dish அன்ரெனாக்கள் அரச அங்கிகாரமின்றி தனிப்பட்ட முறையில் இறக்கமதி செய்யப்பட்டவையாகும். அதாவது திருட்டுத்தனமாக என்றும் கொள்ளலாம்.

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

13 கருத்துகள்:

http://rkguru.blogspot.com/ சொன்னது…

கொடுமை......

Karthick Chidambaram சொன்னது…

:(

இதன் மூலம் இந்திய டிஷ் (டிஷ் டிவி, பிக் டிவி, டாடா ஸ்கை, எயார்டெல் டிஜிட்டல்) வைத்திருக்கிற தனிநபர்கள் பாதிக்கப்படமாட்டார்கள், அவற்றின் மூலம் கேபிள் நடத்துபவர்கள் தான் தடை செய்யப்படப் போகிறார்கள்.

எனக்குத் தெரிந்த வரை வீடு வீடாகப் போய்த் தேடிப் பிடித்தால் ஒழிய, தனிநபர்கள் பயன்படுத்து இந்திய டிஷ் தொடர்புகளைத் துண்டிக்க முடியாது.

Kiruthigan சொன்னது…

அப்ப இனிமே வீடு வளிய சீரியல் இழுக்காதோண்ண..?
அப்புடியெண்டா முந்திமாரி வீட்ட வாற விருந்தாயிளளோட அன்ரியாக்கள் முகங்குடுத்து இனி கதப்பினமென்ன..!!!

ம.தி.சுதா சொன்னது…

@ குரு, கார்த்திக் என் தளத்திற்கு வருகை தந்ததற்கு மிக்க நன்றி

ம.தி.சுதா சொன்னது…

@ அசோக் நம்ம தமிழன் நண்டு தானே இலங்கைக்கு அனரெனா இறக்குமதி செய்தவரே அவர்களுடன் இணைந்து விட்டார்.

ம.தி.சுதா சொன்னது…

@ கிருத்தி சீரியலி சிலருக்கு போதை அதை மாற்ற முடியாது. நம்மாளுங்க சோற்றிலேயே கள்ளு செய்வார்கள்.

புகைப் போக்கி சொன்னது…

சுதா நீ ஒரு ஊடகவியலாளனாக மாறலாமே

Unknown சொன்னது…

அப்ப நாம இனிமே நிம்மதியா match பார்க்கலாம்.

Unknown சொன்னது…

மற்ற ஒளிபரப்புகளும் பாதிக்கப்படுமா?

jagadeesh சொன்னது…

உங்கள் இடுகைகள் எல்லாம் நன்றாக இருக்கிறது, அனால் தமிழ், ஆங்கில பிழைகள் உள்ளது, பிழை வராமல் பார்த்துக் கொள்ளவும்.

ம.தி.சுதா சொன்னது…

@ வருகைக்கு நன்றி சஞ்சேய்
@ எடேய் வம்பா நான் நிம்மதியாய் வாழ்வது பிடிக்கலியா?

ம.தி.சுதா சொன்னது…

@ இருக்கலாம் கரன் espn, star பற்றியும் ஒரு கதை அடிபடுகிறது
@ வருகைக்கு நன்றி சகோதரா. நீங்க சொன்ன பிறகு தான் நானும் கவனித்தேன். முதலில் என் மானம் வாங்கும் keyboard மாத்தணும். பொறுமையாக என் முக்கிய இடுகைகள் அனைத்தையும் வாசித்து கருத்திட்ட முதல் ஆள் நீங்க தான்

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்

back to top